திருப்பூரில் தலித் விடுதலைக் கட்சியினர் தமிழகத்தில் அனாதை இல்லங்கள் கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் 3 குழந்தைகள் உயிர் இழந்ததை கண்டித்தும் குழந்தைகள் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் அதேபோல் அனாதை இல்லங்கள் கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனாதை விடுதிகளை தமிழக அரசே நேற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தலித் விடுதலை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் பெண்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment