கர்மவீரர் காமராசர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழாவை அனைத்து இந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது தென்னாட்டின் காந்தி என அன்புடன் அழைக்கப்பட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது ஏழை மாணவ குழந்தைகள் பசி போக்க மதிய உணவு திட்டங்கள், சமத்துவம் போற்றும் பள்ளி சீருடைகள் திட்டம், மற்றும் விவசாயிகளின் உணவு உற்பத்தி தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக சக்கரை ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள், நீர் தேக்க அணைக்கட்டுகள் கட்டப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தமிழ்நாடு மக்களுக்காக கர்மவீரர் காமராசர் உருவாக்கினார் இது உலகம் உள்ளவரை போற்றப்படும். திருப்பூரில் கர்மவீரர் காமராசர் அவர்களின் 121 வது பிறந்த நாளை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் திருப்பூர் சங்க ஒன்றிய வியாபாரிகள் பிரிவு தலைவர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கர்மவீரர் காமராசர் அவர்களின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் பின்னர் சிவ சர்மிளா அறக்கட்டளை குழந்தை மற்றும் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பள்ளி பாளையத்தில் உள்ள சங்க கிளை அலுவலகத்தில் அப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகளில் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment