தாராபுரத்தில் ஆதரவற்ற முதியவருக்கு மருத்துவம் பார்க்காமல் மருத்துவமனை வெளியே குப்பையில் போட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அவருக்கு உள் நோயாளி வார்டில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் அவரை காண்பதற்கு உறவினர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் முதியவரை வார்டில் இருந்து அழைத்து வந்து அவரை வீல்சேரில் வைத்துக் கொண்டு வந்து அரசு மருத்துவமனை பிணவறை காம்பவுண்ட் சுவர் வெளிப்பகுதியில் உள்ள குப்பை மேட்டில் குப்பையோடு குப்பையாக படுக்க வைத்துள்ளனர். அந்த முதியவர் உயிருக்கு போராடிய நிலையில் ஈக்கள் மொய்க்க மழையில் நனைந்தபடி நாய்கள் அவரைச் சுற்றி குறைத்துக் கொண்டிருந்தது.
அதை பார்த்த மருத்துவமனை சக நோயாளிகள் இதுபோன்று செயல்படும் ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுத்து அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
அதை தொடர்ந்து அந்த முதியவரை அரசு மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்று மருத்துவம் பார்த்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment