திருப்பூரில், அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் பிரிஜ்வே காலனியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழர்கள் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. சங்க அலுவலக வளாகத்தில் சிந்தாமணி விவசாயமணி அவர்கள் தலைமையில் சங்க மகளிர் அணியினர் கரும்பு நட்டு, மண்பானையில் பச்சை அரிசி, வெல்லம் கலந்த பொங்கல் வைத்தனர், பின்னர் பொங்கல் பானையை சுற்றி கும்மி அடித்து பெண்கள் மகிழ்ந்தனர் சங்க நிறுவனத்தலைவர் ஜி.கே.விவசாய மணி என்கிற ஜி சுப்பிரமணி தலைமையில் திருப்பதி, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் ஆகிய சாமி படங்கள் முன்பு பொங்கல் படைத்து சிறப்பு பூஜை செய்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி பகுதி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment