தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சிறப்பு பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்து துவக்கி வைத்தார் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ முழு கரும்பு ஒன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 14 வது வார்டுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அங்கேரியம் பாளையம் ரோட்டில் அம்மா உணவகம் அருகே உள்ள ரேஷன் கடையில் பொது மக்களுக்கு ரூபாய் 1000, பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ ,முழு கரும்பு ஒன்று, வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட விவசாய அணி செயலாளரும், 14வது வட்டக் கழக செயலாளருமான மு.ரத்தினசாமி, பகுதி துணை செயலாளர் சுப்பிரமணி ,மாநகர மகளிர் அணி புஷ்பா ,முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் பிரகதீஸ்வரன், பகுதி அணி பொறுப்பாளர் வரதன் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment