அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் தலைவர் விவசாய மணி அவர்கள் தலைமையில் மே தின விழா - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 May 2026

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் தலைவர் விவசாய மணி அவர்கள் தலைமையில் மே தின விழா


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் பிரிட்ஜ்வே  காலனியில் உள்ள தலைமை செயலகத்தில் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி (எ) ஜி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் ஹேமப்பிரியா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழ் தாய் வாழ்த்து உடன் தொடங்கிய விழாவில் மே தின வரலாற்றின் அறிமுக உரையை மாநில சங்க பேச்சாளர் சந்திரசேகரன் அவர்கள் வழங்கினார்.


 இவ்விழாவினை சங்க நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணியம் அவர்கள் வழிகாட்டுதலோடு சங்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து மக்களுக்கு சேவையாற்றி வரும் தெக்கலூர் ஊராட்சி எரிப்பாளையம் கிளை மகளிர் அணி தலைவி மஞ்சுளா லட்சுமணன் அவர்களுக்கு சங்கப் பெண்மணி 20 26 விருதினை சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜி கே விவசாய மணி (எ)ஜி. சுப்பிரமணியம்  அவர்கள் தன் பொற்கரங்களால் வழங்கினார் பின்னர் சிறப்புரை ஆற்றினார் தனது உரையில் மக்களுக்காக உழைக்கும் அனைவருக்கும் இந்த விருதினை ஒவ்வொருவரும் பெற வேண்டும் விடாமல் உழையுங்கள் உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும் வெற்றி உங்கள் வசமாகும் என்று தனது எழுச்சி 

உரையில் குறிப்பிட்டார் முன்னதாக மே தின பொதுக்கூட்ட சிறப்பு முறையில் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் முத்துச்சாமி அவர்கள் பேசிய போது நமக்கென ஒரு தொழில் அடையாளத்தை ஏற்படுத்தி தற்சார்பு நிலையை அடைய வேண்டும் இதற்காக நாம் உழைக்க வேண்டும் மேலும் இவ்விழாவில் திண்டுக்கல் ஆன்மீக பிரிவு தலைவர் முருகானந்தம் ஊடகப்பிரிவு செயலாளர் குருநாதன் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் தாராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் குமார் அன்னூர் ஒன்றிய தலைவர் குருசாமி திருப்பூர் மாநகர 1வது மண்டலம் தலைவர் சிவசுப்பிரமணியம் சங்க பேச்சாளர் முகவை கண்ணன் சூலூர் மகளிர் அணி தலைவி அன்னக்கொடி ஒன்னாவது மண்டல மகளிர் அணி தலைவி வீரலட்சுமி செல்வி கனிஷ்கா ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மூலனூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி வடக்கு தொகுதி செயலாளர் வேலுச்சாமி சங்க பேச்சாளர் சாரதா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் சிறப்புரை ஆற்றினார்


 சங்கத்தின் சட்ட ஆலோசகர் திலகவர்மா அவர்கள் மே தின உறுதி மொழியை வாசித்தார் சங்கத்தின் தலைமை நிலைய ஆலோசகர் நாகேந்திரன் அவர்களின் நன்றியறையோடு நாட்டுப்பண் இசைக்க மே தின விழா பொதுக்கூட்டம் இனிதே நடைபெற்றது

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad