திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் கே 395 இலுப்ப நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 25. 02.2021 அன்று இலுப்ப நகரத்தில் கதவு எண் 2 /108 வசிக்கும் ராமசாமி அவர்கள் 25 கிராம் தங்க நகையை ரூபாய் 75 ஆயிரத்திற்கு அடகு வைத்து உள்ளார்.
தங்க நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் ராமசாமி அவர்கள் பெயர் இடம்பெறவில்லை என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது நகைக் கடனை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுத்தார்.
மேலும் திருப்பூர்மாவட்டம் உடுமலை வட்டம் K 395 இலுப்ப நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 26/02/2021 அன்று இலுப்ப நகரத்தில் கதவு எண் 2/62 ல் வசிக்கும் கிருஷ்ண மூர்த்தி என்பவர் தனது 13 கிராம் 600 மில்லிஎடைகொண்ட தங்கநகையை ரூ37 ஆயிரத்திற்கு அடகு வைத்துஉள்ளார். அடகு ரசீது எண்(61991065000325) தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி பட்டியலில் கிருஷ்ணமூர்த்தி பெயர் இல்லை என்று தொடக்க வேளாண்மை வங்கியில்அதிகாரிகள் கூறுவதாக கூறினார்.
இது சம்பந்தமாக தனது நகை கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்ப்பு நாளில் கிருஷ்ணமூர்த்தி மனு கொடுத்தார்.
No comments:
Post a Comment