பற்றி சமூகநலத் துறையினரிடம் விசாரித்த பொழுது பெரியவர் தர்மலிங்கம் அவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதேபோல் கோபித்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிடுவார் என்றும் அவரின் மகன்களுக்கு தகவல் தெரிவித்து வந்து அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள், முதியவர்கள் இருவரின் நிலைமை அறிந்து திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் பணி புரியும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் K. சண்முகவடிவு, C. பார்த்திபா, A. கலை ச்செல்வி, T. இந்துமதி, R. R. ரேவதி ஆகியோர் குடிநீர் உணவு வாங்கிக் கொடுத்து பசியாற்றி ஆறுதல் கூறினர், அங்கிருந்த பொதுமக்கள் ஊர் காவல் படையினரை பெரிதும் பாராட்டினர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் குறைதீர்ப்பு நாள் நடைபெறும் இதில் முருங்கபாளையம் பகுதியைச் சேர்ந்த முதியவர் தர்மலிங்கம் அவர்களை அவர்களின் 4 மகன்கள் சரிவர கவனிப்பதில்லை என்று குற்றச்சாட்டு கூறி தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படியும் அவர் உறவினர் தாயம்மாள் அவர்களும் தங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று கண்ணீருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு எஸ் வினித் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
No comments:
Post a Comment