திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று 09.04.2022 பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிரே மாநில விவசாய அணி செயலாளர் Dr. G. மயில்சாமி அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் திரு கே. ஜீவா மற்றும் திரு ராஜா முகமது அவர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வடகிழக்கு மாவட்ட பொருளாளர் திரு. ஜான்சன், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு. புகழேந்தி, மாவட்ட துணைச்செயலாளர் திரு. செ.மகேந்திரன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநிலத் துணைத் தலைவர் திரு. மெல்கியோ சுதன், திரு. ஸ்ரீதர், திரு. ஷாஜி, திரு காஜா மைதீன், ஒன்றிய செயலாளர் திரு ராஜாமுகமது, திரு.பழனி குமார், திரு துரை காந்திராமன், மகளிர் அணியைச் சேர்ந்த சாந்தி, திருமதி அமுதா, திருமதி புஸ்பராணி உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment