தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீதான ஆய்வுக்கூட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 9 April 2022

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீதான ஆய்வுக்கூட்டம்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் இ.ஆ.ப.,அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீதான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாகட் ர்.எஸ்.வினீத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் (08.04.2022) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீதான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தெரிவித்தாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மகளிர் ஆணையத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்காண அனைத்து உதவிகளையும் நல்ல முறையில் செய்து வருகிறார்கள். மேலும், பெண்களுக்கென பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் வன்முறைகளை பற்றிய உதவி எண் 1098 பள்ளிகளின் சார்பாக அனைத்து குழந்கைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நல்ல முறையில் செய்யப்பட்டு வருகிறது.


திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்கான மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான திட்டங்கள் கிராமம் முழுவதும் சென்றடைய வேண்டும். மேலும், எல்.சி.சி மற்றும் ஐ.சி.சி கமிட்டிகள் மூலம் பெண்களுக்கான உதவிகளை செய்துவருகிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் நிம்மதியாக வேலை செய்ய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. பெண்களுக்கான உதவி மையங்கள் உள்ளதை அனைத்து பெண்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

நூற்பாலை போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கான புகார் பெட்டிகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு தடை செய்ய வேண்டும்.


மேலும், 181 உதவி எண் மூலம் இது வரை திருப்பூர் மாவட்டத்தில் 1030 புகார்கள் வரப்பெற்று 1000 புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. 161 குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து புகார்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


தொடர்ந்து. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையதலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மகளிர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.


இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சசாங்சாய் இ.கா.ப., தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி.கீதா, மாநகர காவல் துணை ஆனையர் திரு.ரவி இ.கா.ப., மாவட்ட சமூக நல அலுவலர் திரு.அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad