அவிநாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னூரில் வரும் முன் காப்போம் திட்ட முகாம் நடைபெறுகிறது, பொன்னே கவுண்டன்புதூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் வருகிற 25/ 4/ 20 22 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது முகாமில் இசிஜி, எக்ஸ்ரே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், சர்க்கரை, ரத்த அழுத்தம், காச நோய், கண் நோய், ஆகியவற்றிற்கு நவீன கருவிகள் வாயிலாக பரிசோதனை செய்யப்படுகிறது.
அரசு காப்பீடு திட்டத்தில் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் நிபுணர்கள் முகாமில் பங்கேற்க உள்ளனர், தடுப்பூசி போடப்படுகிறது ரத்ததான முகாம் யோகா கற்பிக்கப்படுகிறது மருத்துவ காப்பீடு அட்டை தேவைப்படுவோர் ஆதார் ரேஷன் கார்டுடன் முகாமிற்கு வரவேண்டும் என அலுவலர் தர்மராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment