திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட அன்னூர் தாலுகாவில் புதிய சார்பதிவாளர்அலுவலகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகா உருவாகி 10 ஆண்டுகள் ஆகிறது அன்னூர் சார்பதிவாளர் அலுவலகம் வரம்பிற்குள் 2 பேரூராட்சிகள் 17 ஊராட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் காட்டம்பட்டியில் புதியதாக அமைக்க உள்ள அலுவலகத்தில் காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்தூர், நாரணாபுரம், பச்சாம்பாளையம், செட்டிபாளையம் ஆகிய 6ஊராட்சிகள் வருகிறது, இதுபற்றி அன்னூர் சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அன்னூர் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் இருந்த பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், உப்பிலிபாளையம், கிட்டாம்பாளையம் ஆகிய ஊர்கள் சூலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment