திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நகர, கிராமப் பகுதியில் இருந்து வந்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர் இங்கு வருவாய் துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் என்ற தகவல் பலகையில் வடக்கு வருவாய் துறைசார்ந்த அதிகாரிகள் தொடர்பு எண்கள் மக்களுக்கு தெரியும்படியாக தாலுகா அலுவலகம் முன்பு மாட்டப்பட்டு இருந்தது.
அந்த பலகை தற்போது எடுத்து விட்டார்கள் இதுபற்றி பொதுமக்கள்கூறுகையில் அந்த தகவல் பலகையில் கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட்ட தொலைபேசி எண்கள் இருந்தது எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது அது தற்போது எடுத்துவிட்டதால் புதிதாக மாறும் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்பு என்னும் பெயரும் தெரிவதில்லை ஆதலால் மீண்டும் அந்த தகவல் பலகை மாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment