திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை இலுப்ப நகரம் ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முதல் விநாயகர்கோவில் வரை உள்ள தார் சாலை இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், என்றும் அதேபோல் மாரியம்மன் கோவில் முதல் தார்சாலை மரிகந்தை இராமச்சந்திராபுரம் வல்லக்குண்டாபுரம் செல்லும் ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், என்றும் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அவர்களுக்கு 4/2/2022 தேதியன்று பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி பஞ்சாயத்து தலைவர் மூலமாக கடிதம் கொடுக்கப்பட்டது.
ஊர் பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் உடுமலை வட்டாட்சியரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேற்காணும் இரண்டு தார்சாலை களையும் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அந்த சாலைகளை கொண்டுவர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினித் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் ஆலாமரத்தூர் பொதுமக்கள் மனு கொடுத்தனர்
No comments:
Post a Comment