திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் "கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுகழக பொறுப்பாளர் கே.ஈஸ்வரமூர்த்தி மடத்துக்குளம் பேரூராட்சி மன்றத்தலைவர் கலைவாணி பாலமுரளி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரங்கநாதன் மற்றும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய திமுகழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மடத்துக்குளம் பேரூர் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment