ஜாதி சான்றிதழ் வாங்க முடியாத நிலையில் பள்ளி மாணவர்கள் தீர்வு கிடைக்குமா? - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

ஜாதி சான்றிதழ் வாங்க முடியாத நிலையில் பள்ளி மாணவர்கள் தீர்வு கிடைக்குமா?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று குறை தீர்ப்பு நாளில் தமிழ்நாடு தொழுவ நாயக்கர் மகாஜன முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்க வந்தனர் அந்தமனுவில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் தொட்டிய நாயக்கர் உட்பிரிவுகளில் ஒன்றான தொழுவ நாயக்கர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறோம் எங்களுடைய சமுதாயம் கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் குறிப்பாக மாணவ மாணவர்கள் சேர்க்கையின் போது ஜாதிச்சான்று வாங்குவதற்கு வருவாய்துறையை அணுகும் போது ஜாதிச்சான்று கிடைக்க மிகவும் சிரமமாக உள்ளது சில சமயத்தில் பெற முடியாத நிலைமை உள்ளது.


இதனால் குழந்தைகளின் எதிர்காலம்கேள்விக்குறியாக மாறுகிறது எனவே தங்கள்கருணை கூர்ந்து பரிசீலனை செய்து தங்கு தடையின்றி சாதிச்சான்று கிடைப்பதற்கு ஆவன செய்து எங்களுடைய சமுதாய குழந்தைகள் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ். வினித் ஐஏஎஸ் அவர்களிடம் தொழுவ நாயக்கர் மகாஜன முன்னேற்ற சங்க மாநில தலைவர் கட்டபொம்மன் ராஜா அவர்கள், பொது செயலாளர் முத்து அவர்கள், பொருளாளர் தங்கபாண்டி அவர்கள் ,மற்றும் விடுதலை களம் கட்சி தலைவர் கோ, நாகராஜன் அவர்கள் திருப்பூர் மாவட்ட தொழுவ நாயக்கர் மகாஜன முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ் பொன்ராஜ் செயலாளர் வி.கார்த்திகேயன் பொருளாளர் டி, சதீஷ்குமார் துணைத் தலைவர் கே, கோபால் துணை செயலாளர்எம். மகாலிங்கம் ஆவியோ மனு கொடுத்தனர்.


மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதற்கு தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்துள்ளார் நிகழ்வில்  ஆனந்த், ஜெகதீஸ்வரன், சக்திவேல் ,கேஜி சக்திவேல், செந்தில்குமார், காளிமுத்து ,செந்தில், கந்தகுமார், மகேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad