இறப்பு சான்றிதழ் பெற இலஞ்சம் கேட்கும் மருத்துவர்கள், அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 April 2022

இறப்பு சான்றிதழ் பெற இலஞ்சம் கேட்கும் மருத்துவர்கள், அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

இயற்கை இறப்பு மருத்துவ சான்றிதழ் வாங்க‌ அலையும் மக்கள் மனித வாழ்வில் இறுதி கட்டம் இறப்பு இறந்த உடலை அடக்கம் செய்வதற்கு மருத்துவ சான்றிதழ் மிக அவசியம் கொரானா காலத்திற்குப்பிறகு மக்கள் இயற்கை மரணம் அடைந்தால் இறுதி சடங்கை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.


15/4/2022 திருப்பூரில் அங்கேரிபாளையம் பகுதியில்  முதியவர் வயது மூப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்தார் அவரது உடலை அடக்கம் செய்வதற்கு மருத்துவச்சான்று தேவைப்பட்டதால் காலை முதல் மாலை 4மணி வரை மருத்துவர்களிடம் இறப்புசான்று பெறமுடியவில்லை ஒரு மருத்துவர் ரூ.3ஆயிரம் கொடுங்கள் நான் போனில் சொல்கிறேன் இறப்பு சான்று தரமாட்டேன் என்று கூற மனது நொந்த நிலையில் வேறு மருத்துவர்களை பார்க்க முயற்சி எடுத்தனர் இறுதியாக ஒரு மருத்துவர் இயற்கை இறப்பு என்பதை உறுதி செய்துகொண்டு மருத்துவச் சான்றிதழ் வழங்கினார்.


அப்போது சான்றிதழ் வாங்கியவர்கள் பணம் எவ்வளவு கொடுக்க வேண்டும் ஐயா என்று கேட்க இறப்புச் சான்றுக்கு பணம் வாங்குவதில்லை என்று அந்த மனித நேயமிக்க மருத்துவர் கூற கண் கலங்க நன்றி கூறினர்.


பிறகு இறுதி சடங்கை செய்து முடித்தனர் இயற்கை இறப்பு மருத்துவச்சான்றிதழ் பிரச்சனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என சமூக ஆர்வலர் பால்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad