திருப்பூர் குமரன் சிலை முன்பு மத்திய அரசை கண்டித்து அனைவருக்கும் கல்வி கேட்டு அனைவருக்கும் வேலை கேட்டு தொடர்ந்து போராடும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐஐடிஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்தும் தமிழை அழித்து இந்தியை திணிக்காதே என்றும் ஒரே தேர்வு ஒரே நாடு ஒரே உணவு ஒரே மொழி ஒரே மதம் ஒரே தேர்தல் என்று மக்கள் மீது திணிக்காதே என்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்திய நாடு இதை சிதைக்க வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திரளாக கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment