திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

திருப்பூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.வினித் இஆப அவர்களின் தலைமையில் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது, பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை புதிய குடும்ப அட்டை வேண்டிய சாலை வசதி குடிநீர் வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 569 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ் வினித் இஆப அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப. ஜெய்பீம் அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திரு அ லட்சுமணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad