திருப்பூர் மாநகராட்சி 10வது வார்டில் உள்ள ரேஷன் கடைகளில் ரூபாய் ஆயிரம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடங்கப்பட்டது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் பணியை தொடங்கி வைத்தார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 1165 ரேஷன் கடைகள் மூலம் 7, 98, 693 ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் ரூபாய் ஆயிரம் 15 வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கொ, ராமதாஸ் மற்றும் 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டாபாலு ஆகியோர் ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கி நிழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஈ. தங்கராஜ், 10வதுவார்டு செயலாளர் சசிக்குமார், 14வது வார்டு செயலாளர் மு ரத்தினசாமி, பாத்திர தொழிற்சங்க பொதுச் செயலாளர் வேலுச்சாமி, பகுதி கழக துணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் அந்த பகுதி பொதுமக்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment