சிறப்பு விருந்தினராக வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய தேவ் ராஜ் பங்கேற்று பேசும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கலைக்கவசம் அணிவது அவசியம் இருவர் மட்டுமே இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் எடுத்து வாகனத்தை இயக்க வேண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தின் சைலன்சரை மாற்றி அமைக்க கூடாது.
தலை கவசத்தில் கேமரா பொருத்திக் கொண்டு வாகனத்தை இயக்குவது தவறாகும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அவசியம் அணிய வேண்டும் செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று கூறினார் மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் மாணவ செயலாளர்கள் ராஜாபிரபு பூபதி ராஜா விக்னேஷ் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பொதுமக்களுடன் இணைந்து சாலை விதிகளை கடைபிடிக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் எமன் வேடமணிந்து அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

No comments:
Post a Comment