உடுமலை ஜிவிஜி கல்லூரியில் பிப்ரவரி 4 இல் முப்பெரும் வேலைவாய்ப்பு முகாம் !! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 January 2023

உடுமலை ஜிவிஜி கல்லூரியில் பிப்ரவரி 4 இல் முப்பெரும் வேலைவாய்ப்பு முகாம் !!


உடுமலை ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சுய உதவி குழுக்கள் அமைத்தல் மற்றும் வங்கி கடன் முகாம் நடைபெற உள்ளது.

கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு ,மற்றும் அதற்கு மேல் படித்த வேலை இல்லாத இளைஞர்கள் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை, பழுது பார்க்கும், நிறுவனங்கள் ,ஐடி நிறுவனம், மற்றும் மருந்து விற்பனை, உணவு உற்பத்தி, நிதி நிறுவனங்கள் முகாமில் ஆட்களை தேர்வு செய்கின்றன. 


முகாமில் தகுதியான சுய உதவி குழுக்கள் கடன் வழங்க தர மதிப்பீடு செய்யப்படுகின்றது. பல்லடம் பொங்கலூர், பகுதிக்கான முகாம் வரும் 28ஆம் தேதி பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், உடுமலை மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம், ஒன்றியங்களுக்கு ஜி.வி.ஜி மகளிர் கலை கல்லூரியில் 4, தேதி நடக்கிறது.


- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad