தாராபுரம் நகர திமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 February 2023

தாராபுரம் நகர திமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக கழகம் சார்பில் அண்ணாவின் 54 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தாராபுரம் அமராவதி ஆற்று பாலம் ரவுண்டானா அருகே மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவப் படத்தை கையில் ஏந்தியவாறு மௌன ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி ரோடு பூக்கடை கார்னர் பெரிய கடைவீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலையை வந்து அடைந்தனர் அங்கே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு ரோஜா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் திரளாக மகளிர் அணியினர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad