அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி 15 வேலாம்பாளையம் முதலாவது மண்டலத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாநகர 14வது வார்டு திமுக கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 14வது வார்டு திமுக கழக செயலாளர் மு,ரத்தினசாமி, பகுதி கழக துணைச் செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் கஜேந்திரன், மாநகர மீனவரணி அமைப்பாளர் ஆறுச்சாமி, பிரதிநிதிகள் ரவி, குமார் ,துணை செயலாளர் சீனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment