தாராபுரத்தை அடுத்த டி.காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராமாத்தாள். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தோட்ட வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது மதியம் வீட்டிற்கு வந்த ராமாத்தாள் கதவை திறந்து பார்த்த போது வீட்டின் மேல் கூரையில் ஓடு பிரித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பாத்திரங்கள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாராபுரம் போலீசில் சரவணன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்.
விசாரணையில் சரவணன் வீட்டில் திருடியது அதே பகுதியை சேர்ந்த இளங்கோ மற்றும் இவருடைய நண்பர் முத்துக்குமார் (35) என தெரியவந்தது. இதையடுத்து இளங்கோவனை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முத்துக்குமாரைதேடி வந்தனர். இந்த நிலையில் முத்துக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment