ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக மடத்துக்குளத்திற்கு சரக்கு லாரி ஒன்று நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அந்த லாரி தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையம் வந்தபோது லாரியில் இருந்து சில காகித கட்டுகள் கீழே விழுந்தன. அரசு ஆவணங்கள் மற்றும் சில தாஸ்வேஜூகள் தவறி சாலையில் கீழே சிதறி விழுந்தது.அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கீழே சிதறி கிடந்த ஆவணங்களை எடுத்து பார்த்தனர்.
அதில் 'சீல்' பிரிக்காத கவர்கள் இருந்தது. அதனை சிலர் பிரித்துப்பார்த்தனர்.இதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் பல்வேறு அரசு ஆவணங்கள் பள்ளி, கல்லூரி, சான்றிதழ்கள் ஆந்திரா போஸ்டல் சர்வீஸ் ரிஜிஸ்ட்ரேஷன் கடிதங்கள், நீதிமன்றம் ஸ்டாம்ப் வில்லைகள், நீதிமன்றத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிகப்படியான ரிஜிஸ்டர் தபால்கள் ரோட்டில் சிதறி கிடந்தன. இதனைப்பார்த்த பொதுமக்கள். வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அவற்றை எடுத்து படித்துப் பார்த்தனர். அப்போது அதில் ஒரு காகிதத்தில் ஆந்திர மாநிலத்தின் தனியார் நிதி நிறுவனம் ஒன்று 2018-ம் ஆண்டு ரூ.1 கோடியே ரூ.60 லட்சம் பெற்றதாக செய்ததாகவும் அந்த கவரில் ஆங்கிலம் மற்றும் ஆந்திர மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது.
அதில் ஆந்திர மாநிலத்தின் ஆவணங்கள் தாராபுரம் சாலையில் சிதறி கிடந்ததால் இதில் ஆந்திர மாநிலத்தில் ஏதோ முறைகேடு நடந்துள்ளதா? ஆந்திர மாநில முறைகேட்டை மறைப்பதற்காக அந்த ஆவணங்கள் லாரி மூலம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து அதை மறைக்கும் பணியில் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராபுரம் அருகே ஆந்திர மாநில அரசின் ஆவணங்கள் ரோட்டில் சிதறி கிடந்த சம்பவம் தாராபுரம் வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment