திருப்பூர் மாவட்டம் சங்கராமநல்லூர் பேரூராட்சி பணியாளர்களின் அலட்சியப் போக்கால் ருத்திராபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் திமுக சார்பாக தண்ணீர்வண்டிகளின் மூலமாக பொதுமக்களின் இடங்களுக்கு தேடிச்சென்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் திமுகவினருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment