திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் JV டேப்ஸ் கட்டிடத்தின் மேலே இருந்த தொலை தொடர்பு டவர் நிறுவன சொந்த உபயோகத்திற்காக வைக்கப்பட்டு போதிய பராமரிப்பின்றி இருந்துள்ளது, இயற்கை சீற்றத்தால் பலமாக வீசிய காற்றின் காரணமாக உடைந்து கீழே சாய்ந்தது.
இரவு நேரமாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமோ, உயிர் சேதம் இல்லை, இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன் அரசு விழிப்புடன் செயல்பட்டு திருப்பூர் பகுதி முழுவதும், மற்றும் தமிழக முழுவதும் ஆய்வு செய்து உபயோகமில்லாத டவர்களைக் கண்டறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment