அந்த தீ மள மளவென்று கடை முழுவதும் பரவியதால் பெரும் புகை வரத் தொடங்கியது கடையின் உள் சிக்கி தவித்த ஊழியர் வெப்பம் தாங்க முடியாமல் அலறினார் உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து அந்த ஊழியரை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர் இதனால் அவர் உயிர் தப்பினார் மேலும் தீ செருப்புக்கடையின் மேல் தளத்திலும் பக்கத்து கடைகளிலும் தீ பரவ ஆரம்பித்தது உடனடியாக அவிநாசி தீயணைப்பு நிலையத்திற்கும் மின்வாரியத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதற்கிடையில் மின்வாரிய ஊழியர்களும் விரைந்து அந்த பகுதிக்கான மின் இணைப்பை துண்டித்தனர் ஆனாலும் தீப்பிடித்தது ரப்பர், தோலினால் ஆன பொருட்கள் இதனால் அதிக அளவில் புகை சூழ்ந்தது அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக கட்சி அளித்தது திருப்பூர் குமார் நகர் தீயணைப்பு நிலையத்திலிருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
தீயணைப்பு துறை வீரர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகே தீ முற்றிலும் அணைக்கப்பட்டது தீ விபத்து பற்றி தகவல் அறிந்த அவிநாசி தாசில்தார், போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் இந்த தீ விபத்தால் அவிநாசி ரோட்டில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அவிநாசி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

No comments:
Post a Comment