திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்பொழுது வரும் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக, பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி பள்ளியின் ஆசிரியர்கள் சையது முகமது தஸ்தகீர், கார்த்திகேயன் மற்றும் பள்ளியின் பகுதிநேர விளையாட்டு ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் காரத்தொழுவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் வீடுகள் கடைகளுக்குச் சென்று, காரத்தொழுவு பள்ளியின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கினர்.

கோடையில் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்காக பாடுபடும் ஆசிரியர் பெருமக்களை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் இவர்களின் சேவைக்காக பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இப்பள்ளியில் கடந்த வருடம் பயின்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment