யாரும் உதவிட முன்வரவில்லை இந்த நிலையில் அந்த சிறுவனின் தாய்க்கு உதவும் வகையில் அவருக்கு பெட்டிக்கடை அமைத்துக் கொடுக்க 16 வது வார்டு அதிமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் திருப்பூர் மெரீடியன் ரோட்டரி சங்கத்தினர் தலா பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு செல்வி வீட்டின் அருகே பெட்டிக்கடை அமைக்கப்பட்டது, இந்த பெட்டிக்கடையை மாற்றுத்திறனாளி காளீஸ்வரனின் குடும்பத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் தலைமை தாங்கினார், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் கவிதாலட்சுமி ரோட்டரி மெரீடியன் தலைவர் அசோகன் செயலாளர் விஜயகுமார் தலைவர் (தேர்வு) பார்த்திபன் பட்டய தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிதி உதவி வழங்கி தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிய கவுன்சிலர் தமிழ்செல்வி கனகராஜ் மற்றும் ரோட்டரி சங்கத்தினருக்கு செல்வி குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் ரோட்டரிசங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 9944578006.
No comments:
Post a Comment