ஒரு கல்லில் (ஆய்வில்) 3 டன் மாம்பழம் கிடைத்தது உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 11 May 2023

ஒரு கல்லில் (ஆய்வில்) 3 டன் மாம்பழம் கிடைத்தது உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை.


திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் இ.ஆ.ப அவர்களின் அறிவுறுத்தலின் படி உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்  விஜயலலிதாம்பிகை  தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி, பாலமுருகன், தங்கவேல், கேசவராஜ்,  கோடீஸ்வரன், சிரஞ்சீவி, ரகுநாதன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நான்கு குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே எஸ் சி ஸ்கூல் ரோடு, தினசரி மார்க்கெட், அதியமான் வீதி, நொய்யல் வீதி மற்றும் வெள்ளியங்காடு  ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் வாழைப்பழ குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வின்போது இரண்டு மாம்பழ குடோன்களில் இருந்து சுமார் 3.5 (மூன்றரை) டன் அளவிலான வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மூலம் உரக்கிடங்கிற்கு உரம் தயாரிப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மாம்பழங்களின் மொத்த மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ஆகும். இது தொடர்பாக  5 மொத்த விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 


மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள் வைத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நியமன அலுவலர்  கூறுகையில் பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும் எத்திலின் ரசாயனத்தை பழங்களின் மேல் நேரடியாக படும்படியாக பழுக்க வைப்பதற்கு அனுமதி கிடையாது சரியான முறைகளை பயன்படுத்தி மட்டுமே  பழங்களை பழுக்க வைக்க வேண்டும். கால்சியம் கார்பைடு அசிட்டலின் போன்ற ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. 


இவ்வாறு செயற்கையான முறையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும் குறிப்பாக செயற்கையான முறையில் பழுக்க  வைக்கப்பட்ட  மாம்பழம் சாப்பிட்டால் தோல் அலர்ஜி வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாந்தி ஏற்படும்.  ரசாயனமூலம் பழுக்கப்பட்ட  மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் உட்பகுதி காயாக இருக்கும் பழச்சாறு அளவு குறைவாக இருக்கும் பழத்தின் இயற்கையான மனம் குறைவாக இருக்கும் சுவை குறைவாக இருக்கும். மாம்பழ விற்பனை உரிமையாளர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


உணவு புகார் தொடர்பாக 9444042322 என்ற whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தார்கள் 

No comments:

Post a Comment

Post Top Ad