தாராபுரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்கலாம் - தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 12 May 2023

தாராபுரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்கலாம் - தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்.


தாராபுரம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் மானியத்துடன் வெங்காய பட்டறை அமைக்கலாம் என்று தாராபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் எஸ்.திவ்யா அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- வெங்காயம் வெங்காய சாகுபடிக்கு பல்வேறு சலுகையை மத்திய - மாநில அரசுகள் வழங்கிவருகின்றன. இதன் ஒருபகுதியாக வெங்காயப் பட்டறை அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மகசூல் அதிகரிக்கும் போது விவசாயிகள் அவற்றை உடனடியாக சந்தைக்கு கொண்டு செல்லாமலும், ழுகல் மற்றும் முளைப்பதை தவிர்த்து நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2023-24- கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கவுண்டச்சிபுதூர் நல்லாம்பாளையம், பொம்மநல்லூர் கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள பயன் பெறலாம். 

மானியம் வெங்காயப் பட்டறை அமைப்பதற்கு, தோட்டக்கலை துறை மூலம், விவசாயிக்கு, 87 ஆயிரத்து, 500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பெற 2½ ஏக்கர் விளைநிலமும் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயியாக இருக்க வேண்டும். விருப்பமுள்ள விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவும், www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ளலாம்.


மேலும் அந்தந்த கிராம உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். அதன்படி கவுண்டச்சிபுதூர் மணிகண்டன்- 7338726839, ஜானகி-8220709645, நல்லாம்பாளையம்- கனகராஜ்-9976267323,பொம்ம நல்லூர்-மணிகண்டன்- 7338726839, சம்பத்குமார்-6381395756 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad