இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. அந்த ஊரே விழாக்கோலமானது. இதையடுத்து அன்று காலை புனித நீா் எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டது. 10-ந்தேதி பொங்கல், முளைப்பாறி எடுத்துவருதல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னா் 11-ந்தேதி காலை பாரம்பாிய நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு நடைபெற்றது.

அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் ஏற்கனவே தாங்கள் தயாா் செய்து வைத்து இருந்த மஞ்சள் நீரை தங்கள் மாமன் மகன் மற்றும் மாமன் மகள் மீது ஊற்றி விளையாடினா். இதனால் உறவு பலப்படும், நோய்கள் தீரும், மழை பெய்யும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மகிழ்ச்சி அதன்படி மாமா மகன் மீது அத்தை மகள்களும், அத்தை மகள் மீது மாமன் மகன்களும் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் கலந்தை நீரை ஊற்றி கொண்டாடினர். உறவுகள் மீது மஞ்சள் நீரை ஊற்றியதால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

No comments:
Post a Comment