
நேற்று காலை 10 மணி அளவில் உப்பாறு ஆலாம்பாளையத்துக்கு மரம் வெட்டுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தாராபுரம்-திருப்பூர் சாலையில் காங்கயம் பிரிவு அருகே வந்த போது கோவை கணபதியை சேர்ந்த மணிவண்ணன் (42) என்பவர் தனது குடும்பத்துடன் மதுரைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.காங்கயம் பிரிவு சாலையில் வந்தபோது எதிர்பாராத விதமாக காரும், மோட்டார்சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள் காரின் முன் பகுதியில் புகுந்ததில் தந்தை-மகன் இருவரும் உடல்கள் நசுக்கி உயிருக்கு போராடினர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் நாச்சிமுத்து-செல்வக்குமார் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிறகு இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணை விபத்தில் இறந்த செல்வகுமாருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். காரை ஓட்டி வந்த மணிவண்ணன் காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment