இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிதாக பணியிட மாற்றம் மற்றும் பணி உயர்வு பெற்ற மாவட்ட ஆட்சியர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்ததாகவும் அப்போது தமிழக முதல்வர் தமிழக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமங்கள் நகரங்கள் என அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உழைத்திட வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருப்பதாகவும் முதல்வரின் ஆலோசனைகளின் படி திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடைய மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பணியாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்று புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டத்தின் 11 வது மாவட்ட ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment