காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் இவர் முதுகலை கால்நடை அறிவியல் பட்ட மேற்படிப்பை நாமக்கல் கால்நடை அறிவியல் ஆராய்ச்சி கல்லூரியில் படித்து பின்னர் அதே கல்லூரியில் உதவி பேராசிரியராக 4 ஆண்டுகள் பணியாற்றினார், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் நேரடி துணை காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார், பின்னர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சென்னை அண்ணா நகரில் உதவி ஆணையாளராக பணியாற்றினார், 2007-ஆம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர் பெற்று பாதுகாப்பு பிரிவிலும், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார், 2012 -ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர துணை கமிஷனராகவும் அதன் பிறகு மதுரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையிலும் பணியாற்றினார்.
2021-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார் தற்போது (2023) திருப்பூரில் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் பி.சாமிநாதன் இ.கா.ப., திருப்பூர் மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment