தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் கடைவீதி பகுதியில் உள்ள உணவுப் பொருட்களின் மாதிரி எடுத்து உடனடியாக பரிசோதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை உத்தரவின் பேரில் தாராபுரம் உணவு பாதுகாப்புத் துறை இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் நடமாடும் உணவு பாதுகாப்புத்துறை லேப் டெக்னீசியன்கள் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
தாராபுரம் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, பொள்ளாச்சி ரோடு,பூக்கடைக்காரர்னர்,என்.என். பேட்டை வீதி, ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடை பேக்கரி தள்ளுவண்டி கடைகள் கூல்ட்ரிங்க்ஸ் கடைகளில் உள்ளிட்ட 40 கடைகளில் மாதிரி எடுக்கப்பட்டு நடமாடும் சோதனைக் கூடத்தில் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. உணவு சேம்பிள்களை எடுத்தனர்.
எண்ணெய் கூல்ட்ரிங்ஸ் பருப்பு உட்பட பல்வேறு மாதிரிகளை எடுக்கப்பட்டது. நடமாடும் சோதனை கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை செய்ததின் அடிப்படையில் சேம்பிள் எடுத்தவர்களின் பொருட்கள் தரம் குறைவாக இருந்தால் அந்த கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அறிவுறுத்தப்படும் மேலும் தரத்தை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை உணவு பாதுகாப்புத்துறை மூலம் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment