அரசு வேலைக்கு இலவச பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 May 2023

அரசு வேலைக்கு இலவச பயிற்சி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 621 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்த தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலி பணியிடங்களும் சேர்க்கப்பட உள்ளது இந்த தேர்வுக்கு வருகின்ற 1-ம் தேதி முதல் www.tnusrb.tn.gov.in என்ற  இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க  ஜூன் மாதம் 30-ஆம் தேதி கடைசி, இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் வருகின்ற 30ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது, திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்தப்படும், மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இலவச பயிற்சியில் பங்கேற்க தங்களது பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421 2999152 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் இந்த தகவலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்  


- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad