திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள சோமனூர் மண்டல் புதூர் செல்லும் ரோட்டில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் ஒன்றியம் திமுக சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.
200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பழனி,பொள்ளாச்சி, உடுமலை, காங்கேயம்,உடுமலை, கேரளா, மற்றும் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டது.
போட்டிகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்வலி செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சீறிப்பாய்ந்து காளைகளைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர் 200 மீட்டர் 300 மீட்டர் இருபிரிவுகளிலும் முதல் 10 இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசு தங்கக்காசு உட்பட பல்வேறு பரிசுகள் அளிக்கப்பட்டன. அலங்கியம் போலீஸார் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்தனர்.
No comments:
Post a Comment