தற்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் 1963 இயற்றப்பட்டு செட்டில்மெண்ட் தாசிலர்களால் பணியமர்த்தப்பட்டு உரிய விசாரணைக்குப் பின்பும் நிலத்தை உழுது கொண்டிருந்த உழவர்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள பட்டா நிலங்களை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு துறையும் இந்து சமய அறநிலையத்துறையின் வக்பு வாரியம் இணைந்து பத்திரப்பதிவுத்துறை ஆவணங்களில் பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் குண்டடம் மூலனூர் கோவிந்தாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பாதிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமராவதி சாலையிலிருந்து இருந்து பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக வந்தனர். அவர்களை தாராபுரம் டிஎஸ்பி தனராசு இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தடுத்து நிறுத்தி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து தமிழக விவசாயி பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் ஈசன் தெரிவிக்கையில் தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை 12 லட்சம் ஏக்கர் நிலங்களையும் வக்பு வாரியம் 78,000ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் உரிமைக்கோரி பத்திரப்பதிவுத்துறை மூலமாக பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் செயல்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்துள்ளது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உடனடியாக இதில் தலையிட்டு இந்து சமய அறநிலையத்துறை, பத்திரப்பதிவுத்துறை, வக்பு வாரியம்,ஆகியவற்றுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து சட்ட விரோதமாக எந்தவித அரசாணை இல்லாமல் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நில அபகரிப்பு செய்து வருகிற பணிகளை உடனடியாக தடுத்து உடனடியாக பூஜ்ஜியம் மதிப்பு செய்யும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழக முழுதும் 20 லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம் குறிப்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 20000 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment