திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் ஜோத்தம்பட்டி ஊராட்சிக்கு குப்பை கிடங்கு வேண்டுமென்று கணியூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகளை ரோட்டில் கொட்டி ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜோத்தம்பட்டி ஊராட்சியில் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருப்பதன் காரணமாக குப்பைகளை கொட்டுவதற்கு சரியான இடம் இல்லை என்று சோத்தம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பாக தலைவர் திரு செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஜோத்தம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வட்டாட்சியரிடம் மனு கொடுத்திருப்பதாகவும் கூறினர்.
No comments:
Post a Comment