திருப்பூரில் அரசு விழாவை விட மனித உயிர்களே முக்கியம் என விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய செய்தித் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 May 2023

திருப்பூரில் அரசு விழாவை விட மனித உயிர்களே முக்கியம் என விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய செய்தித் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக  செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்து ராஜாவும் காரில் சென்று கொண்டிருந்தனர், அந்த சமயத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு செல்வதற்காக நான்கு பேர் காரில் சென்றுள்ளனர், அவர்களின் கார் தாராபுரம் காங்கேயம் புறவழிச்சாலை அருகே வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கம் விழுந்து விபத்து ஏற்பட்டது.


இதைக்கண்ட அந்த வழியாக சென்ற அமைச்சர் சாமிநாதனும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜாவும் காரில் இருந்து இறங்கி வந்து விபத்தில் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டனர், அந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் படுகாயம் அடைந்தனர், மற்ற இருவர் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர் தொடர்ச்சியாக அவர்களை அமைச்சர் மற்றும் ஆட்சியர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தாங்கள் செல்லும் அரசு விழாவிற்கு காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை என அரசு விழாவை விட மனித உயிர்களே முக்கியம் என விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உரிய சிகிச்சைக்காக அனுப்பி வைத்த அமைச்சர் சாமிநாதன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்து ராஜ் ஆகியோரின் மனிதாபிமான செயலை கண்டு பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad