அந்தப் பகுதிகளுக்கு கடந்த 25 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது கோடை காலம் என்பதால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் வழங்கப்படவில்லை இதனால் அந்தப் பகுதி மக்கள் 60க்கும் மேற்பட்டோர் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி ஜோதிமணி தலைமையில் திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் திரண்டு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர் குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி தலைவர் குமார் கமிஷனர் அப்துல் ஹாரிஸ் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைவர் மற்றும் கமிஷனரிடம் வரி செலுத்தவில்லை என்றால் வீடு தேடி வந்து குடிநீர் இணைப்பை துண்டிக்கும் நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் ஏன் வழங்குவதற்கு தாமதம் செய்கிறது என்றும் அந்த ஆண்டிற்கு செலுத்திய வரிக்கு குடிநீர் வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு தகுதியில்லாத நிலையில் எதன் அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து வரி செலுத்தினால் வரி சலுகை வழங்கப்படும் என்று நிர்வாகம் கூறுகிறது என்றும் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம் என்று கூறியும் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மூன்று நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் மற்றும் தலைவர் உறுதி அளித்தனர் இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் மூன்று நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர் இதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர் இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment