திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது விவசாயிகள், பொதுமக்கள் கொடுத்துள்ள பல்வேறு புகார்கள் மீது திருப்பூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வள்ளல் நடவடிக்கை எடுக்காமல் முறைகேடான கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் புகாரின் அடிப்படையில் கலெக்டர் வினித் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சென்று உதவி இயக்குனர் வள்ளலிடம் அறிவுரை வழங்கியும் அதைக் கண்டு கொள்ளாமல் உதவி இயக்குனர் வள்ளல் அனுமதியில்லாத கல்குவாரிகள் உரிமையாளர்களை ஆதரித்து லஞ்ச பணம் வசூலிக்க பெண் ஊழியர் ஒருவரை நியமித்தும் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.

இவரது நடவடிக்கையை கண்காணித்து வந்த கலெக்டர் வினித் தனது கடைசி நாள் கலெக்டர் பணியில் திருப்பூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வள்ளல் மீது உள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அப் பணியில் இருந்து விடுப்பு செய்து உத்தரவிட்டார் சற்றும் எதிர்பாராத இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடிப் போனார் வள்ளல் மற்றும் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரி உரிமையாளர்கள் இனி புதியதாக வரும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் இதே போன்ற அதிரடி நடவடிக்கைகளால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

No comments:
Post a Comment