திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் 14 வது வார்டு பெரியார் காலனி 2 வது வீதியில் 15 வேலம்பாளையம் மன வளக்கலை மன்ற அறக்கட்டளைக்கு உட்பட்ட பெரியார் காலனி மன வளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது இங்கு மக்கள் அறிவு வளர்ச்சிக்கு உதவும் வகையில் பொது நூலகம் அமைக்கப்பட்டு இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார் செயலாளர் அர்ஜுனன் பொருளாளர் செல்ல குமாரவேல் மற்றும் 14வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ், வடக்கு தொகுதி எம்எல்ஏ கே என் விஜயகுமார், மரியாதைக்குரிய மேயர் என் தினேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ் மனவள கலை மன்ற துணைத் தலைவர்கள் தமிழரசன், சுப்பிரமணி உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர், இந்த பொது நூலகம் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் மாணவர்கள் என அனைவரின் பயன் பெறும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment