தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதி, 58-வது வட்ட திமுக சார்பில் தாராபுரம் ரோடு, K.செட்டிபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர செயலாளருமான டி .கே. டி. மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும் மேயருமாகிய ந.தினேஷ்குமார், வடக்கு மாநகர அவைத்தலைவர் க.ஈஸ்வரமூர்த்தி, பகுதி செயலாளர் நா.குமார், வட்ட செயலாளர் கேபிள் ராஜேந்திரன், வழக்கறிஞர் அணி மா.பார்த்திபன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ம.சூர்யா, மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment