நிலத்தடி நீர் சாயக்கழிவு கலந்து வருவது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பூர் மாநகர 14 வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கனகராஜ் பொதுமக்களுடன் பாட்டில்களில் மாசு படிந்த நீருடன் வந்து புகார் மனு கொடுத்தார் அந்த புகார் மனுவில் திருப்பூர் மாநகராட்சி 16 வது வார்டுக்கு உட்பட்ட சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றதாகவும் தற்போது அந்த பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிண றுகளில் எடுக்கப்படும் தண்ணீரானது ரசாயன கலவையாக வருகிறது என்றும் அந்த நீரினை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தோல் அரிப்பு போன்ற பல உடல் நல கோளாறுகளை உண்டாக்குகிறது என்றும் மேலும் அந்த நீரை எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாதளவிற்கு நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து உள்ளதாகவும் ஆகவே இந்த பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரை பாதுகாக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்.
No comments:
Post a Comment