பிறகு அங்கிருந்து சென்றார் மீண்டும் அதிகாலை 6 மணிக்கு சம்பவ இடத்திற்கு மீண்டும் வந்த செல்வராஜ் எம்எல்ஏ தீயினால் எரிந்த பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துணைகொண்டு முழுமையாக அப்புறப்படுத்தி அவ்விடத்தை சீர் செய்தது தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கண்ணீருடன் இருந்த வியாபாரிகள் ஒவ்வொருவரையும் சந்தித்து என்னால் முடிந்த உதவியை விரைவில் செய்கிறேன் என்று ஆறுதல் கூறினார்.
உடனடியாக களத்தில் இறங்கிய க. செல்வராஜ் எம்எல்ஏ சில மணி நேரங்களிலேயே பாதிக்கப்பட்ட அனைவரையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்து பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ 50 ஆயிரம் வீதம் 51கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ 25- லட்சத்து 50-ஆயிரம் நிவாரணத்தை உடனடியாக வழங்கினார், கண்ணீர் மல்க பணத்தைப் பெற்றுக் கொண்ட வியாபாரிகள் குடும்பத்துடன் நன்றி தெரிவித்தனர்.
உடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், தொமுச மாநில துணைச் செயலாளர் டி கே டி மு நாகராசன், எஸ்.திலக்ராஜ் (மாவட்ட திமுக) மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment