திருப்பூரில் ஞானோதயம் கல்வி அறக்கட்டளை மற்றும் நலன் உணவகம் சார்பில் யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இருந்து அவிநாசி வரை யோகா தின விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆண்கள் பெண்கள் கைகளில் பேனர் பிடித்துக் கொண்டும் யோகா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் பிடித்தவாறு ஊர்வலத்தில் சென்றனர்.
மேலும் இந்த ஊர்வலத்தின் போது யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விவரங்கள் அச்சடித்த துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மேலும் ஒலிபெருக்கி மூலம் யோகா பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டது இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையினர் உடன் சென்றனர் திருப்பூர் திருமுருகன் பூண்டி சுகன் சுதா மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் மருத்துவ உதவிக்காக ஊர்வலத்தில் உடன் சென்றது.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment